நெல்லை: பைக்கில் அதிவேகமாக சென்றதால் தகராறு- 2 வழக்குகள் பதிவு

நெல்லை மாநகரம், பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கில் சென்றதை தட்டிக் கேட்டதில் தகராறு ஏற்பட்டது.;

Update:2025-06-06 15:39 IST

திருநெல்வேலி மாநகரம், பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், நரிக்குறவர் காலனியில் நேற்று (5.6.2025) ராமசந்திரன் மகன் பட்டவராயன்(எ) மாயா (வயது19) என்பவரது உறவினரின் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் அனைவரும் திருமணத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் நரிக்குறவர் காலனியில் பைக்கில் அதிவேகமாக சென்ற பாக்கியராஜ் மகன் ஆதி(20) என்பவரை ஏன் இவ்வாறு வேகமாக செல்கிறாய் என்று கேட்டதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுற்றியிருந்த குடும்பத்தாரும் ஒருவரை ஒருவர் கைகள் மற்றும் கற்களால் தாக்கியதில் சிறு காயம் அடைந்த 13 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களில் உரிய அனுமதியின்றி 8 பேர் வெளியே சென்றனர். இது தொடர்பாக பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரண்டு தரப்பைச் சேர்ந்த 9 பேரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்