நெல்லை: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து தி.மு.க. பிரமுகர் உயிரிழப்பு

பஸ் நிலைய கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.;

Update:2024-12-21 05:12 IST

நெல்லை,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 65). இவர் அங்குள்ள பாத்திர கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இவர் வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

பஸ் நிலையம் அருகே வந்தபோது, புதிதாக கட்டிடப் பணிகள் நடந்து வரும் பஸ் நிலைய கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இரவு நேரம் என்பதாலும், ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டதாலும் யாரும் கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் முருகன், கழிவுநீர் தொட்டியில் கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு முருகன் பரிதாபமாக இறந்து கிடப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன முருகன், தி.மு.க.வில் வள்ளியூர் நகர பொருளாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்