இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்: அடுத்த மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அடுத்த மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.;

Update:2025-09-22 05:15 IST

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘மல்டி-பேண்ட்' ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ஜிசாட்-7' (ருக்மினி) உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது. நாட்டின் கடற்படை நடவடிக்கைகளை கணிசமாக ஜிசாட்-7 என்னும் ருக்மினி செயற்கைக்கோள் மேம்படுத்தி வந்தது.

ருக்மினி செயற்கைக்கோள் இந்திய கடற்படைக்கு தகவல் தொடர்பு திறன்களை திறம்பட வழங்கி உள்ளது. இந்தநிலையில் புதிய ரக ஜிசாட்-7 ஆர் (சி.எம்.எஸ்-02) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப இந்திய கடற்படை கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி இஸ்ரோவிடம் கேட்டுக்கொண்டது.

இதனை தற்போது இஸ்ரோ தயாரித்து சோதனைகளை முடித்து உள்ளது. இதனை எல்.வி.எம்-3 எம்-5 என்ற ராக்கெட் மூலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-வது வாரம் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக பணியில் இறங்கி உள்ளனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்