நெல்லையில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி
நெல்லையில் 65 மின் நுகர்வோர்களுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியில் இருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டது.;
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், வி.எம்.சத்திரம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சக்திநகர் பகுதியில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆகியோர்களின் உத்தரவுபடி, திருநெல்வேலி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்து 420 மதீப்பீட்டில் ஒரு புதிய மின்மாற்றி (63 கி.வோ.) திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் ஆகியோர்களின் வழிகாட்டலில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்றது.
அதனை தொடர்ந்து அந்த புதிய மின்மாற்றி நேற்று (11.6.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்னூட்டம் செலுத்தப்பட்டு இயக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதிக்கு ஏற்கெனவே உள்ள மின்மாற்றியிலிருந்து பிரித்தெடுத்தப்பட்டு 65 மின் நுகர்வோர்களுக்கு இந்த புதிய மின்மாற்றியில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. மேலும் புதிய மின் இணைப்பு வழங்கியதால் சீரான மின்சாரம் வழங்க ஏதுவாகும். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், வி.எம்.சத்திரம் பிரிவு உதவி மின் பொறியாளர் சுடர், வி.எம்.சத்திரம் உதவி மின் பொறியாளர் (கட்டுமானம்) ஜன்னத்துல் சிபாயா, கட்டுமானம் பிரிவு பணியாளர்கள், ஸ்ரீ சக்திநகர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.