அடுத்த திருப்பம்... நாளை நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி ராமதாஸ்
பாமக நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.;
சென்னை,
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். குறிப்பாக, அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் என்றும், கட்சியின் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் எனவும் கூறினார். இது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாமக நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பனையூர் அலுவலகத்தில் நாளை முதல் ஞாயிறு வரை பாமக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை பாமக தலைவர் அன்புமணி சந்திக்க உள்ளதாகவும், மாவட்டம் தோறும் புதிய உறுப்பினர் அட்டைகளை அன்புமணி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.