நீலகிரி: கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கருஞ்சிறுத்தை

கருஞ்சிறுத்தைகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.;

Update:2025-06-18 05:46 IST

கோப்புப்படம் 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு அருகே பெரியார் நகர் கிராமம் உள்ளது. இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் கரடி, காட்டெருமை, கருஞ்சிறுத்தை, சிறுத்தைகள், முள்ளம் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில் கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்தது. பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.

இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். அதே பகுதியில் கடந்த ஓராண்டாக சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்