வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம் விளக்கம்
வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி நேற்று முன்தினம் மரணமடைந்தார்.;
கோப்புப்படம்
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி நேற்று முன்தினம் மரணமடைந்தார். சட்டமன்ற தொகுதி காலியானால் அந்த தொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள், எம்.எல்.ஏ. மறைந்தால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9-ம் தேதி முடிவடையும் நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.