பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.;
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம். இவருக்கு வயது, 65. இவர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு காய்ச்சல் அதிகமானது.
இதனையடுத்து பெ.சண்முகம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் பெ.சண்முகம் மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறைந்தபட்ச சமூக இடைவெளி கடைபிடித்தல், மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் முககவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.