சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

காவல்துறையினர் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-08-15 16:11 IST

விழுப்புரம்,

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெய்ந்தி மற்றும் வார விடுமுறை என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வருவதால், சென்னையில் வசித்து வரும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள், விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று இரவு முதலே சென்னையின் புறநகர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்றைய தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இன்று காலை முதல் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விழுப்புரத்தை கடந்து தென் மாவட்டங்களை நோக்கி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசலால் சென்னையில் இருந்து விழுப்புரம் சென்றடைய சுமார் 5 மணி நேரம் வரை ஆனதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றபடி, மெதுவான வேகத்தில் செல்கின்றன. காவல்துறையினர் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்