சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு
சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், 1,500 லாரிகளுக்கு லோடு ஏற்ற அனுமதி கோரி, 3ஆம் நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் 5,500 சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அந்த மனுவில், “எல்.பி.ஜி. கேஸ் என்பது அத்தியாவசிய பொருள், அதை விநியோகம் செய்யாமல் இருப்பது சட்டவிரோதம். எல்பிஜி விநியோகம் செய்ய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு அரசு உத்தரவிட வேண்டும்” என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.