பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்
தேர்தல் ஆணைய அதிகாரிகளை அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. நிர்வாகிகளை ஒருவர் நியமிப்பதும் மற்றொருவர் நீக்குவதுமாக அதிரடிகள் தொடர்கிறது.
இந்த பரபரப்பான சூழலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.