நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

புத்தூர் அண்னா சிலை அருகே மாதா கோவில் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சாய்ந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-21 09:30 IST

நாகை,

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.அதன்படி கடந்த 13-ந்தேதி திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார்.நேற்று அவர் நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து கார் மூலம் நாகை சென்றார். வழி நெடுக தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

பின்னர் தனது பிரசார வாகனத்தின் மூலம் நாகை அண்ணா சிலை அருகே திரண்டிருந்த மக்களிடையே மதியம் 1.30 மணிக்கு நடிகர் விஜய் பேசினார். விஜயின் பிரசாரத்தை பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். போலீசார் விதித்த நிபந்தனைகளையும் மீறி தவெகவினர் ஆங்காங்கே கட்டிடங்களில் ஏறி நின்றதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், புத்தூர் அண்ணா சிலை அருகே மாதா கோவில் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சாய்ந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் ஏறியதில் சுவர் சாயந்து விழுந்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்