'பிரித்தாளும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றன' - கவர்னர் ஆர்.என்.ரவி
அதிகம் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலும் சாதிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சுவாமி திருவருட்பிரகாச வள்ளலாரின் 202-வது அவதார தினத்தையொட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுடன் கவர்னர் மாளிகையின் வள்ளலார் பூங்காவில் வள்ளலாருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
“நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும்போது, 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள். யாருடன் போராடும் தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. நாம் கண்டிப்பாக இணைந்து வாழ வேண்டும்.
நாட்டின் பல இடங்களில் சாதிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அதிகம் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலும் அது இருக்கிறது. 50 சதவீத உயர்கல்வி விகிதம் கொண்ட தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர். பிரிவினையை ஏற்படுத்தும் பிரித்தாளும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றன. பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார்.”
இவ்வாறு அவர் கூறினார்.