சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்;

Update:2025-09-16 18:15 IST

பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் ஒருசில பகுதிகளில் நாளை மறுதினம் (18.09.2025 - வியாழக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை முழு விவரம்:-

சென்னையில் 18.09.2025 அன்று (வியாழக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கொரட்டூர்: அன்னை நகர், டிவிஎஸ் நகர், டிஎன்எச்பி, பாடி, எம்டிஎச் சாலை, பூங்கா சாலை, தாதன்குப்பம், செந்தில் நகர், ஆசிரியர் காலனி, லட்சுமிபுரம், புத்தகரம், விவேகானந்த நகர்.

இராமாபுரம்: கிரி நகர், குறிஞ்சி நகர், ஆனந்தம் நகர், அம்பாள் நகர், கம்பர் சாலை, தமிழ் நகர்.

பூவிருந்தவல்லி: பை பாஸ், கோல்டன் ஹோம்ஸ் பிளாட்ஸ், எம்டிசி டிப்போ.

பெரம்பூர்: பத்மாவதி நகர், திருமால் நகர், சூரப்பேட்டை பிரதான சாலை, விஜயலட்சுமி நகர், புருஷோத்தமன் நகர், வெங்கடசாய் நகர், கே.வி.ஆர்.நகர், பாலாஜி நகர், மூர்த்தி நகர், கட்டிட தொழிலாளி நகர், காஞ்சி நகர், பரிமளம் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெரு.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்