புதுக்கோட்டை: நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றான்.;

Update:2025-10-11 02:17 IST

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ராயவரம் கிராமத்தை சேர்ந்தவர் மெய்யம்மாள் (வயது 72). இவர் ராயவரம்- கடியாபட்டி சாலையில் மந்தை அம்மன் கோவில் அருகே வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவிலுக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.

அவரது வீட்டிலிருந்து 100 அடி தூரம் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம ஆசாமி மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றான். இச்சம்பவம் தொடர்பாக மூதாட்டி மெய்யம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்