ராமநாதபுரம்: இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு சிறை
இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவத்தில் 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;
ராமநாதபுரத்தில் இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவம் தொடர்பாக 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அப்துல்லா என்பவரை காரில் கடத்தி கொலை செய்து கடலில் வீசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கொலை செய்த 3 பேர் நேற்று முன்தினம் போலீசாரிடம் சரணடைந்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான முகமது அனஸ், முகமது ஷாருக்கான், சிவப்பிரசாத், முதியவர் லியக்கத் அலி ஆகியோருக்கு ஜூன் 6ஆம் தேதி வரை சிறைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.