நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது
இந்த துப்பாக்கி சூட்டில் நாய்க்கு முதுகில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவார். இந்த நிலையில் இவர் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்திற்குள் நாய்கள் கூட்டமாக சுற்றி வந்ததைப் பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
இதனையடுத்து அவர் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து நாயை சுட்டார். இதில் நாட்டு இன நாய்க்கு முதுகில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதனை நாயின் உரிமையாளர் ராதிகா தட்டிக்கேட்டுள்ளார்.
இதனையடுத்து ராதிகா தட்டிக்கேட்டதற்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.