சீமான் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அன்புச் சகோதரர் சீமானுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
சென்னை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமானுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.