டாக்டர் ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த செங்கோட்டையன்

டாக்டர் ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து செங்கோட்டையன் நலம் விசாரித்தார்.;

Update:2025-10-07 10:26 IST

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டாக்டர் ராமதாசை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது உடல்நிலை குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று தனது விருப்பத்தை அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது உடல்நிலை குறித்து கேட்டறிந்த செங்கோட்டையன், சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதைபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் கடந்த 4- தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைகோவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெயிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்