செங்கோட்டையனின் எண்ணமே தவறானது; கே.பி.ராமலிங்கம் பேட்டி
செங்கோட்டையனை சந்திக்க பா.ஜனதா தயாராக இல்லை என்று கேபி ராமலிங்கம் கூறினார்.;
நாமக்கல்,
நாமக்கல்லில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், “அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளர் செங்கோட்டையனின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. என்ற எண்ணமே தவறானது. பா.ஜனதாவுக்கும், செங்கோட்டையனின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த செங்கோட்டையன் போல பலர் வருவார்கள். ஆனால் அது தேர்தலில் எதிரொலிக்காது.
செங்கோட்டையனை சந்திக்க பா.ஜனதா தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் யாரையும் தேர்தல் முடியும் வரை பா.ஜனதாவினர் யாரும் சந்திக்க மாட்டோம். கூட்டணி கட்சிகளை கையாள பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என டி.டி.வி.தினகரன் கூறுவது சரியில்லை. அவர் அவ்வாறு பேசக்கூடாது”என்றார்.