சவாரி வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ டிரைவர் கைது

இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு கூறி ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;

Update:2025-11-13 00:36 IST

கோப்புப்படம் 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசித் நாயர் (33 வயது). இவர், தன்னுடன் பணிபுரியும் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடன் நேற்று முன்தினம் இரவு மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வடபெரும்பாக்கத்தில் உள்ள தாங்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு ஆட்டோவில் சவாரி சென்றனர்.

அந்த ஆட்டோ டிரைவரான பல்லு பிரசாந்த் (24 வயது) மாதவரம் வி.எஸ்.மணி நகர் அருகே ஒரு மறைவான இடத்தில் ஆட்டோவை நிறுத்தினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை சவாரி வந்த இளம்பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த பெண் கூச்சலிட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.

இதனால் அசித் நாயர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை கத்திமுனையில் பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பல்லு பிரசாந்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்