பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

60 வயது முதியவரான முகமது அலி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;

Update:2025-10-11 15:40 IST

கோப்புப்படம் 

நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி (60 வயது). டீ மாஸ்டர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி அன்று 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது அலியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட முகமது அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்