சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு - மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் வரை செல்லக் கூடிய வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார ரெயில் சேவையின் அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படவில்லை என்றும், சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக ரெயில்கள் இயக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து பெரம்பூர் வழியாக ஆவடி, திருவள்ளூர் வரை இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களின் சேவையும் பரவலாக இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.