நெல்லையில் மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன் கைது
முத்துலட்சுமி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாஸ்கர் அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாகப் பேசி கல்லால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றார்.;
நெல்லை மாவட்டம், ஏர்வாடி, கீழூர், தளபதிசமுத்திரம், வடக்கு தெருவை சேர்ந்த பாஸ்கர் (வயது 36) என்பவரும் சுபா என்பவரும் கணவன் மனைவி ஆவர். கடந்த 26.4.2025 தேதி அன்று சுபா வீட்டை விட்டு சென்றுள்ளார். இதற்கு சுபாவின் தாயான முத்துலட்சுமி (54) என்பவர் தான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டு 7.5.2025 அன்று முத்துலட்சுமி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாஸ்கர் முத்துலட்சுமியை பெண் என்றும் பாராமல் அவதூறாகப் பேசி கல்லால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து முத்துலட்சுமி ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பாஸ்கரை நேற்று (8.05.2025) கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.