தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் - தலைமைச் செயலாளர் ஆலோசனை

கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.;

Update:2025-09-24 21:11 IST

சென்னை,

ஆயுதபூஜை (01.10.2025) மற்றும் தீபாவளி பண்டிகை (20.10.2025) தொடர் விடுமுறைகளை முன்னிட்டு, தமிழகத்தில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டமானது, இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பயணிகள் சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் மற்றும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கும் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்குவது மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தொடர்புடைய துறைகள் மற்றும் அதன் சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், உள்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர், போக்குவரத்துத்துறை ஆணையர், உறுப்பினர் செயலாளர் CMDA, தாம்பரம் காவல் ஆணையர், போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்