திருப்பூர் வழியாக பாரவுனி-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில்
சிறப்பு ரெயில் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு பாரவுனியில் இருந்து புறப்பட்டு 29-ந்தேதி காலை 8 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.;
திருப்பூர்,
திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் வேலை செய்யும் மாவட்டங்களுக்கு திரும்ப பாரவுனி-எர்ணாகுளம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
பாரவுனி-எர்ணாகுளம் (வண்டி எண்.06184) ஒரு வழி சிறப்பு ரெயில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு பாரவுனியில் இருந்து புறப்பட்டு வருகிற 29-ந்தேதி காலை 8 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி இரவு 1 மணிக்கு வந்து 1.02 மணிக்கு புறப்படும்.
இந்த தகவலை, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.