கும்பாபிஷேகம்: நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.;

Update:2025-07-01 11:27 IST

மதுரை,

அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 7-ந்தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06101) நெல்லையில் இருந்து வருகிற 7-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06102) திருச்செந்தூரில் இருந்து வருகிற 7-ந் தேதி நண்பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரெயில் பாளையங்கோட்டை, செய்துங்நல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குறும்பூர், ஆறுமுகனேரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்