தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-பெங்களூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி-பெங்களூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.;

Update:2025-10-12 21:39 IST

தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-பெங்களூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதன்படி பெங்களூர்-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06297) அக்டோபர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் பெங்களூரில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

இந்த ரெயில் பெங்களூர் கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறு மார்க்கத்தில் (வண்டி எண்- 06298) இந்த ரெயில் தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை, அக்டோபர் 22ம் தேதி புதன்கிழமை ஆகிய நாட்களில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரெயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த சிறப்பு ரெயிலை இயக்க உள்ள ரெயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கத்தின் சார்பாக செயலாளர் பிரமநாயகம் நன்றி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்