தூத்துக்குடி-சென்னை, பெங்களூருக்கு மீண்டும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடக்கம்
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
தூத்துக்குடி,
கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு வருவாய் இழப்பு ஏற்பட்டதால் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு மீண்டும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை தண்ணீர் பீய்ச்சி அடித்து விமான நிலைய நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.