சென்னையில் 5 வார்டுகளில் நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-30 21:52 IST

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை 5 வார்டுகளில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (31.07.2025) மணலி மண்டலம், வார்டு-17ல் கொசப்பூர், சென்னை நடுநிலைப்பள்ளி அருகிலுள்ள உடற்பயிற்சிக் கூடம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-46ல் எஸ்.எம்.நகர் பிரதான சாலை, சி.கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-83ல் கொரட்டூர், ஶ்ரீரங்கா மஹால், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151ல் ஆற்காடு சாலையில் உள்ள கிருஷ்ணவேணி திருமண மண்டபம், பெருங்குடி மண்டலம், வார்டு-183ல் பாலவாக்கம், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கமர் குடியிருப்பு ஆகிய 5 வார்டுகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்