திருப்பத்தூர்: 3 வயது சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் தெருநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.;

Update:2025-08-26 23:27 IST

தமிழகத்தில் தெருநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியை சேர்ந்த 3 வயது மோசிக்கிரன் இன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, சிறுவன் மோசிக்கிரனை தெருநாய் கடித்துக்குதறியது. இந்த சம்பவத்தில் சிறுவன் படுகாயமடைந்தா. சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்