பழைய கட்டிடத்திற்கு காதலனை இரவு 11 மணிக்கு அழைத்த மாணவி: அடுத்த நடந்த சம்பவம்
வீட்டுக்கு செல்லும் முன்பு தனது காதலனை தனிமையில் சந்தித்து பேசலாம் என்று திட்டமிட்டார் மாணவி.;
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவியும், அவரது தாயாரும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார்கள். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் பார்க்கும் பழக்கம் இருந்தது. அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் வடசென்னையை சேர்ந்த சாய் (வயது 22) என்ற வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. காதலன் சாயுடன் அந்த மாணவி எப்போதும் செல்போனில் பேசி வந்தார். மேலும் அந்த மாணவி அடிக்கடி செல்போன் பார்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். அடிக்கடி செல்போன் பார்ப்பதை அவரது தாயார் கண்டித்தார். இதனால் மாணவிக்கும், அவரது தாயாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் தனது தோழி ஒருவரின் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் மாணவி தனது வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தார். வீட்டுக்கு செல்லும் முன்பு தனது காதலனை தனிமையில் சந்தித்து பேசலாம் என்று திட்டமிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்திற்கு காதலனை வருமாறு மாணவி அழைதார். பின்னர் அங்கு வந்த காதலன், மாணவியை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்.
அது இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடம் என்பதால் அந்த கட்டிடத்தில் யாரும் வசிக்கவில்லை. அந்த நேரத்தில் சாயின் நண்பர்கள் ராகுல் (26) உள்ளிட்ட 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். திடீரென்று சாயும். அவரது நண்பர்களும் அந்த மாணவியை இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்துக்குள் அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக துறைமுகம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் 3 வாலிபர்களும்அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது.
வாலிபர்களும் அவரிடம் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவி மற்றும் அவரது தாயார்" ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வாலிபர் சாய் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். சாய் இதற்கு முன்பு இதுபோல வேறு பெண்களிடம் தவறாக நடந்துள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இதுபோன்று வேறு பெண்களிடம் தவறாக நடந்திருந்தால் அவர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த விவகாரத்தில் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க போலீசார் தயாராகி வருகிறார்கள்.