ஞாயிறு அட்டவணை படி இன்று புறநகர் ரெயில்கள் இயக்கம்
விடுமுறை நாட்களில், ரெயில் சேவைகள் வழக்கமாக 30 சதவீதம் குறைக்கப்பட்டு இயங்கும்.;
சென்னை,
சென்னை புறநகர் பகுதிகளில், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ரெயில் சேவைகள் வழக்கமாக 30 சதவீதம் குறைக்கப்பட்டு இயங்கும். அதன்படி, இன்று காந்தி ஜெயந்தி.
இதன் காரணமாக இன்று சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரெயில் வழித்தடங்களில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.