தூத்துக்குடியில் அரசு அலுவலகங்களில் தூய்மை இயக்க உறுதிமொழி ஏற்பு

கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள தேவையில்லாத கழிவுகளை சேகரித்து அகற்றும் நிகழ்வு நடந்தது.;

Update:2025-09-19 21:49 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில், தூய்மை மிஷன் கழிவு சேகரிப்பு இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல முன்னெடுப்புகளில் தற்போது கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை சேகரித்து அகற்றும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அலுவலகத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பொருட்கள் சரியான முறையில் வைத்துக்கொள்வதற்கும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்