தமிழக காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது.;

Update:2025-08-09 07:30 IST

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 23.7.2025 முதல் 26.7.2025 வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த டவுண் போக்குவரத்து ஏட்டு சுந்தரமூர்த்தி 300 மீட்டர் தூரத்திற்கான தோன்றி மறைதல் (Snap Target) துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும், மாநகர ஆயுதப்படை ஏட்டு சாலைசந்துரு 300 மீட்டர் தூரத்திற்க்கான நிலையான துப்பாக்கி (இன்சாஸ்) சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.

ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஞ்சூர், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், ஏட்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்குபெற்ற தென்மண்டல அணி பிரிவு ஓட்டுமொத்த ரைபில் பிரிவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன பதக்கம் மற்றும் shield வென்ற காவல் துறையினரை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தலைமையிடம்) விஜயகுமார், மாநகர ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன் மற்றும் டவுண் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்