தகுதித்தேர்வுக்கு பயந்து ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்று பயந்தபடி கடந்த சில நாட்களாக பன்னீர்செல்வம் புலம்பியபடி இருந்ததாக கூறப்படுகிறது.;
கோப்புப்படம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு இ.பி.காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40 வயது). இவரது மனைவி ஷிபா. இவர், அம்மையநாயக்கனூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பன்னீர்செல்வமும் அரசு பள்ளியில் ஆசிரியர் ஆவதற்காக தகுதித்தேர்வு எழுதி வந்தார். கடந்த ஆண்டு நடந்த தகுதித்தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில் நடப்பாண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளார். மேலும் அதற்காக தயாராகி வந்தார். இருப்பினும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்று பயந்தபடி கடந்த சில நாட்களாக பன்னீர்செல்வம் புலம்பியபடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் மேல்மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற பன்னீர்செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.