ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - அறிவிப்பு வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டு(2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(தாள்-1 மற்றும் தாள் -II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்(Website: http://www.trb.tn.gov.in) 11.08.2025 அன்று வெளியிட்டது.
மேற்படி தேர்வுகள் 01.11.2025 மற்றும் 02.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களினால் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் 15.11.2025 அன்று தாள் I-ம் மற்றும் 16.11.2025 அன்று தாள் II-ம் நடைபெறும் எனத் திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.