சென்னை-மதுரை இண்டிகோ விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 67 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.;

Update:2025-06-22 11:12 IST

சென்னை,

சென்னையில் இருந்து மதுரை நோக்கி இன்று காலை 10.15 மணியளவில் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், உடனடியாக விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 67 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். விமானம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து, மாற்று ஏற்பாடாக பிற்பகல் 2 மணியளவில் மதுரைக்கு செல்லும் விமானத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

கடந்த வெள்ளி கிழமை காலை 6.55 மணியளவில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்றில் சிறிது நேரத்திலேயே தொழில் நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அது தரையிறக்கம் செய்யப்பட்டது.

ஏறக்குறைய 30 நிமிடங்களில் விமானம் மீண்டும் தரை பகுதிக்கு திரும்பி காலை 7.17 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. 68 பயணிகளும் பாதுகாப்பாக காயங்கள் எதுவுமின்றி வெளியேற்றப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்