தஞ்சை: கோவில் திருவிழாவுக்கு வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2025-11-12 05:09 IST

தஞ்சை,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்கண்ணன் (வயது24). இவர், தஞ்சை அருகே நடந்த கோவில் விழாவிற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல் தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். சிறுமியும், பிரதீப் கண்ணனும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பிரதீப் கண்ணன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, இதுதொடர்பாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர், வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பிரதீப் கண்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த சிறுமியை பிரதீப்கண்ணன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்