பிரதமர் மோடியின் தலைமையில் நாடு ஒரு தீர்க்கமான மாற்றம் கண்டுள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி

"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.;

Update:2025-06-01 20:22 IST

"ஆபரேஷன் சிந்தூர்" என்ற குறுகியகால மற்றும் துரிதமான ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற தீர்க்கமான வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் அரசு ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற நிலையை இந்தியா வெளிப்படுத்தியதாக விவரித்தார். பாகிஸ்தானை வெளிப்படையாகத் தண்டித்தது, தனது உள்நாட்டு ராணுவத் திறன்களை பறைசாற்றியது, ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் நமது தேசியத் தலைமை மற்றும் ஆயுதப் படைகள் மீது ஒவ்வோர் இந்தியரும் கொண்டுள்ள கூட்டு நம்பிக்கையை வெளிப்படுத்தியது என்று கூறினார்.

மேலும் பல தசாப்த அடக்குமுறைகளிலிருந்து விடுபட்ட போதும், பாகிஸ்தானின் தொடர்ச்சியான தவறான செயல்களுக்கு போதுமான வகையில் எதிர்வினையாற்றாதது மற்றும் முடிவெடுக்க இயலாதது போன்ற நிலைகளுக்கு மாறாக பிரதமர் மோடியின் தலைமையில் நாடு ஒரு தீர்க்கமான மாற்றம் கண்டு, ராணுவ வலிமை மற்றும் ராஜ்ய செல்வாக்கு உள்ளிட்ட தனது தேசிய வளங்களை தேச நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்துவதற்கான தெளிவு, துணிச்சல், உறுதிப்பாடு, அரசியல் விருப்பம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டதாக கவர்னர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்