திருப்பரங்குன்றம் விவகாரம்: அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-03-25 09:24 IST

சென்னை,

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ். இவர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அதில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், இதுதொடர்பாக 1931-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது எனவும் பேசி உள்ளனர். எனவே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்