தூத்துக்குடி: விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவர் விற்பனைக்காக 2 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.;

Update:2025-05-11 12:52 IST

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குருவெங்கட்ராஜ் மேற்பார்வையில், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் மற்றும் போலீசார் நேற்று (10.5.2025) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, மடத்தூர், துரைக்கனிநகரை சேர்ந்த வேல்சாமி மகன் ரவிக்குமார் (வயது 52) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ரூ.1,200, ஒரு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்