தூத்துக்குடி: பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
பொட்டலூரணி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சாயர்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.;
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி, அருணாச்சலம் நகரைச் சேர்ந்த சோலையப்பன் மகன் முத்துமகேஷ் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சாயர்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 30ம்தேதி நள்ளிரவில் வேலை முடிந்து தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பொட்டலூரணி விலக்கு ரோடு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.