தூத்துக்குடி: பைக்கில் இருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலி

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் கூட்டாம்புளியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி பைக்கில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.;

Update:2025-10-29 07:50 IST

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, புது தெருவைச் சேர்ந்த கந்தவேல் மகன் பொன்ராஜ் (வயது 65), கூட்டுறவு வங்கியில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் இவர் கூட்டாம்புளியில் நடந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஒரு வாலிபருடன் பைக்கில் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்