திருச்செந்தூர்: புதிய மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு... பொதுமக்கள் சாலை மறியல்

போராட்டத்தில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர்.;

Update:2025-04-22 00:06 IST

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் புதிய மதுபானக்கூடம் அமைக்க அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் , அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சியினர், ஊர் மக்கள் மற்றும் வியாபரிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் போராட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டதால் போலீசார் திடீரென அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனையடுத்து அனைவரையும் வேனில் ஏற்றி தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்