திருநெல்வேலி: டீ கடை பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரம் திருடியவர் கைது
ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த நபருடைய டீ கடையின் பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிவிட்டதாக அவர் புகார் அளித்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த தாமஸ் (வயது 52), அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது கடையின் பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிவிட்டதாக அவர் புகார் அளித்தார்.
இதுகுறித்து ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் ஈனன் குடியிருப்பு, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மரியசூசை(44) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், மரியசூசையை நேற்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.