தமிழ்நாட்டில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலை நிறுவனம், டாஸ்மாக் தலைமை அலுவலகம், அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகங்களில் சோதனை நடக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்கா செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டதால் மிக சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர்களான அமல்ராஜ், சுபாகருக்கு ஜாமீன் வழங்க செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.விசாரணைக்காகச் சென்ற காவலர்களைத் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை: டெலிக்காம் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை நிர்மலா என்பவருக்கு 15 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. தடுக்க வந்த அவரது கணவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. முன்விரோதம் காரணமாக எதிர் வீட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் பிரேம் (வயது 25)வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். மயிலாடுதுறை நகர போலீசார் பிரேமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை தவெக சார்பில் நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. தவெக இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்கவுள்ளனர்.
சாலைகளில் கொடி மரங்கள் - தனி நீதிபதி உத்தரவு உறுதி
*தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி- மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
*அரசியல் கட்சிகள் உங்கள் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள்
*மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள விசயத்தில் ஜனநாயக உரிமையை கேட்க வேண்டாம்
*சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தும்,பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியம்
*நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கொடி மரங்கள் வைக்க எந்த அனுமதியும் கிடையாது - நீதிபதிகள்
ரமலான் இப்தார் நோன்பு - விஜய் பங்கேற்பு
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ரமலான் இப்தார் நோன்பு நாளை நடக்கிறது
ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கிறார்
தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் - தமிழிசை செளந்தரராஜன் கைது
*சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லிவர் சிரோசிஸ் நோயால் நடிகர் பாதிப்பு
- துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நடிகர் அபினவ், லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) நோயால் பாதிப்பு
- ஆளே அடையாளம் தெரியாத நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
- மேல் சிகிச்சைக்கு மேலும் 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் உதவி செய்யுமாறு உருக்கம்