இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மாநில பாஜக கையெழுத்து இயக்கத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வங்காள தேச கிரிக்கெட் வீரர் முஷ்பிகுர் ரஹீம், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், ஒரு வெற்றியை கூட பெறாமல் வங்காள தேசம் வெளியேறிய நிலையில், ஓய்வை அறிவித்துள்ளார் ரஹீம்.
திருவாரூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு திராட்சை ஊட்டி குழந்தைகளின் பெயர்களை கேட்டறிந்து, வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.முன்னதாக சுய உதவி குழுக்களின் வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து மகளிர் குழு கூட்டமைப்பினரிடம் கேட்டறிந்தார்.
மிக விரைவில் மும்பை நகரில் பைக் டாக்சி சேவை தொடங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம். இதன்மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என போக்குவரத்துத்துறை மந்திரி பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100 டிகிரி க்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 103, கரூரில் 102, மதுரையில் 101, திருப்பத்தூரில் 101, வேலூர் 101, சேலத்தில் 100, திருச்சியில் 100 வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் (நவீன் பட்நாயக் ஆட்சி) பச்சை வர்ணம் நீக்கப்பட்டு காவி நிறத்தில் பள்ளிகள் மாற உள்ளன
துபாயில் இருந்து பெங்களூருக்கு 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்துள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 14ம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சியில் ஈடுபட்டனர். இந்திய தேசிய கொடியை மந்திரி முன்னிலையில் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இருப்பினும், இங்கிலாந்து காவலர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் கைது செய்யாமல் எச்சரித்து விடுவித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.