இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

Update:2025-09-09 08:50 IST
Live Updates - Page 2
2025-09-09 11:11 GMT

என் படங்களை பயன்படுத்த தடை விதியுங்கள் - நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு

என் அனுமதியின்றி என் பெயர்,படம், குரல் உட்பட எந்தவொரு விவரத்தையும் பயன்படுத்த இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2025-09-09 10:47 GMT

ரவுடி மீது துப்பாக்கிசூடு - விருத்தாசலத்தில் பரபரப்பு

கடலூர், விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2025-09-09 10:45 GMT

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேசத்திற்கு ரூ.1,500 கோடி நிதியுதவி ஒதுக்கி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

2025-09-09 10:32 GMT

ராணுவ ஆட்சியை நோக்கி நேபாளம்

நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் வீட்டுக்கு தீ வைப்பு. அமைச்சர்கள், ஆளுங்கட்சி அலுவலகங்கள் மீதும் போராட்டக்குழு தாக்குதல் நடத்தி உள்ளனர். 

தலைநகர் காத்மண்டுவில் இருந்து பிரதமர் சர்மா ஒலி, அமைச்சர்களை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-09-09 10:30 GMT

எரியும் நாடாளுமன்றம்

நேபாளத்தில் பிரதமர், அமைச்சர்கள் இல்லம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிலையில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2025-09-09 10:07 GMT

துணை ஜனாதிபதி தேர்தல்; 3 மணி நிலவரப்படி 96 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-09-09 10:06 GMT

ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி ஆய்வு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்பை வான் வழியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி.

2025-09-09 10:01 GMT

செங்கோட்டையன் - அமித் ஷா சந்திப்பு - பின்னணி என்ன?

உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு கருத்துகளை நாங்கள் அவர்களிடத்தில் எடுத்துச்சொன்னோம் என்று செங்கோட்டையன் கூறினார். 

2025-09-09 09:46 GMT

விஜயகாந்தின் சகோதரி காலமானார்

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

2025-09-09 09:39 GMT

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா

நேபாள பிரதமர் வெளிநாடு தப்பிச்செல்ல இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து காட்மாண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்