சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா?
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளன. அந்த வகையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை 2022-ம் ஆண்டு வெளியான 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு ஆதரவு - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நெதன்யாகு
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இஸ்ரேலுடன் இணைந்து நின்று. நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக கருத்தினை பதிவிட்ட இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு - திமுக அரசுக்கு விஜய் கண்டனம்
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், தவெகவை பார்த்து திமுக பயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வார விசேஷங்கள்: 9-9-2025 முதல் 15-9-2025 வரை
9-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்: அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எது தெரியுமா...?
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகள் குறித்து இங்கு காணலாம்..!
1. இந்தியா 8 முறை
2. இலங்கை 6 முறை
3. பாகிஸ்தான் 2 முறை
மற்ற அணிகளில் வங்காளதேசம் அதிகபட்சமாக 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
18 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதியம் 1 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
புதிய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லி நாடாளுமன்றத்தில் தொடங்கி உள்ளது. தே.ஜ.கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், 'இந்தியா' கூட்டணி சார்பில் சுதர்ஷன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இரு அவையில் மொத்தமுள்ள 788 உறுப்பினர்களில் 7 இடங்கள் காலியானது போக வேட்பாளரின் வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை. தே.ஜ.கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம்: இன்று ரோடு ஷோ செல்கிறார்
இன்று (செவ்வாய்க்கிழமை) எடப்பாடி பழனிசாமி கோவையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.
அவர் மாலை 4.45 மணிக்கு செல்வபுரத்தில் ரோடு ஷோ செல்கிறார். 5.30 மணிக்கு தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அங்கிருந்து ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக குனியமுத்தூர் சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் தடை உத்தரவு அமல்
வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது - இல்லத்தரசிகள் கலக்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.